சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்வு

நம்ம ஊரு திருவிழாக்கள்

கொடியேற்றம் முதல் தேரோட்டம் வரை, தசரா முதல் பொங்கல் வரை — நம்ம ஊர்ல ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள் தலைமுறை தலைமுறையாக நம்மை ஒன்றிணைத்து வருகின்றன.

ஊர் திருவிழாக்கள்

தை மாதம்

முத்தாரம்மன் கோவில் கொடை

கொடை விழா

பக்தர்கள் 7 நாட்கள் விரதமிருந்து, மாவிழக்கு பெட்டி மற்றும் ஆயிரம் கண் பானை எடுத்து வெகு சிறப்பாக 3 நாட்கள் கொண்டாடும் திருவிழா.

schedule தை மாதம் (ஜனவரி — பிப்ரவரி) location_on ஸ்ரீ முத்தாரம்மன் கோவில்
ஆடி மாதம்

முத்தாரம்மன் தசரா திருவிழா

தசரா

குலசை ஸ்ரீ முத்தாரம்மனுக்கு வேடம் அணிந்து கொண்டாடும் தசரா திருவிழா போலவே, அதற்கும் முன்பாக நம்ம ஊரில் கொண்டாடப்படும் சிறப்பான திருவிழா. இதனை பக்தர்கள் அன்போடு "குட்டி தசரா" என்று குறிப்பிடுவர்.

schedule ஆடி மாதம் (ஜூலை — ஆகஸ்ட்) location_on ஸ்ரீ முத்தாரம்மன் கோவில்
ஆவணி மாதம்

சுடலைமாடசுவாமி கோவில் கொடை

கொடை விழா

ஆலமரத்து சுடலை மாடன், முண்டன், வீரசூரன், பெருமாள், பெரம்மா சக்தி மற்றும் பல தெய்வங்களை பூஜை செய்தும், கட்டை எருதல் மற்றும் வாண வேடிக்கையுடன் பிரம்மாண்டமாக நடைபெறும் திருவிழா.

schedule ஆவணி மாதம் (ஆகஸ்ட் — செப்டம்பர்) location_on ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோவில்
புரட்டாசி மாதம்

தசரா திருவிழா

தசரா

நமது குட்டி தசரா போலவே, கூலசை ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் பல ஊர் பக்தர்களும் வேடம் அணிந்து சிறப்பாக கொண்டாடும் தசரா திருவிழாவாகும்.

schedule புரட்டாசி மாதம் (செப்டம்பர் — அக்டோபர்) location_on சிறுநாடார்குடியிருப்பு கோவில்கள்